இந்தியா புதிய சிகரங்களை எட்ட - 130 கோடி இந்தியர்களும் கடினமாக உழைப்பார்கள் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

By செய்திப்பிரிவு

நாடு சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில் அதை அம்ருத் மஹோத்சவ் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அம்ருத் மஹோத்சவத்தின் தொடக்கத்தை குறிக்கும் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா அடியெடுத்து வைக்கும் இந்த பொன்னான தருணத்தில், ஒவ்வொரு இந்தியரையும் நெகிழ செய்யும் நிகழ்வுகளை நாம் காண்கிறோம்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதிக ஜிஎஸ்டி வசூல் வலுவான பொருளாதார செயல்பாடுகளைக் குறிக்கிறது.

ஒலிம்பிக்கில், நமது பாட்மிண் டன் வீராங்கனை பி.வி.சிந்து பதக்கத்தை வென்றுள்ளார். ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி விளையாட்டு அணியினரின் வரலாற்று செயல்பாடுகளையும் நாம் பார்க்கிறோம்.

அம்ருத் மஹோத்சவத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், இந்தியா புதிய சிகரங்களை எட்டுவதை உறுதி செய்வதற்கு 130 கோடி இந்தியர்களும் தொடர்ந்து கடினமாக உழைப்பார்கள்.

இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

19 mins ago

சினிமா

32 mins ago

விளையாட்டு

38 mins ago

சினிமா

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

50 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்