கொல்லப்பட்டவர் மனைவிக்கு ரூ.15 லட்சம் : ஆயுள் காப்பீட்டு கழகம் வழங்க உத்தரவு :

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத்தை சேர்ந்தவர் நரேந்திரசின் பார்மர். கடந்த 2009-ம் ஆண்டு இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரித்தனர். எனினும், பார்மர் எதற்காகக் கொல்லப்பட்டார், யார் கொன்றது போன்ற எந்த விவரங்களும் தெரியவில்லை என்று கூறி போலீஸார் வழக்கை முடித்துக் கொண்டனர்.

இதற்கிடையில், பார்மர் ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (எல்ஐசி) வேறு வேறு விதமான 19 பாலிசிகளை எடுத்து வைத்திருந்தார். அவற்றை எல்ஐசி.யில் கொடுத்து, காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று பார்மரின் மனைவி சேத்னா கோரினார். ஆனால், ‘‘பார்மர் விபத்தில் இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, காப்பீடு வழங்க முடியாது’’ என்று எல்ஐசி கூறிவிட்டது. இதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள கடந்த 2012-ம் ஆண்டு நுகர்வோர் குறைதீர்ப்பு மையத்தில் சேத்னா முறையிட்டார். அங்கும் சேத்னாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன்பின், குஜராத் மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் சேத்னா முறையிட்டார்.வழக்கை விசாரித்த ஆணையம், ‘‘நரேந்திரசின் பார்மருக்கும் கொலை செய்யப்படுவதற்கும் தொடர்பு இல்லை. அவர் யாரையும் ஆத்திரமூட்டும் வகையில் செயல்படவில்லை. மேலும், வேண்டுமென்றே பார்மர் செய்த செயலினால் அவர் கொலை செய்யப்படவில்லை. எனவே, இந்தக் கொலையையும் தற்செயல் மரணமாக கருதி 19 பாலிசிக்கான தொகை ரூ.14.6 லட்சத்தை சேத்னாவுக்கு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்