தினசரி கரோனா தொற்று 48 ஆயிரமாக குறைந்தது :

By செய்திப்பிரிவு

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 48,698 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும்போது இது 5.7 சதவீதம் குறைவாகும். நாட்டில்கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,01,83,143 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 1,183 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் கரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,94,493 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்துகுணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,91,93,085 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 64,818 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,95,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 61.19 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசிசெலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் இதுவரை 31 கோடி பேருக்குவைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கர்ப்பிணி தாய்மார்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்துள்ளது.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்