கரோனா வைரஸ் தொற்று 62,480 ஆக குறைந்தது :

By செய்திப்பிரிவு

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 62,480 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண் ணிக்கை 2 கோடியே 97 லட்சத்து 62,793 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு நல்ல செய்தியாக, தினசரி உயிரிழப்பு 2 மாதங்களுக்கு பிறகு 2 ஆயிரத்துக்கு கீழே குறைந் துள்ளது. கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,587 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் மொத்த எண் ணிக்கை 3 லட்சத்து 83,490 ஆக உயர்ந்துள்ளது.

குணம் அடைவோர் எண் ணிக்கை தொடர்ந்து 36-வது நாளாக அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 88,977 நோயாளிகள் குணம் அடைந்தனர். நாட்டில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 98,656 ஆக குறைந்துள்ளது.

பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படுவோர் தினசரி விகிதம் 3.24 சதவீதமாக உள்ளது. ஜூன் 17 வரை 38 கோடியே 71 லட்சத்து 67,693 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று முன்தினம் மட்டும் 19 லட்சத்து 29,476 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரியில் தொடங்கியது. இதுவரை 26.89 கோடி தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

சினிமா

56 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்