எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வானுக்கு கட்சியின் 5 எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹாரில் லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் கடந்த ஆண்டு காலமானார். அதன்பின் அவரது மகன் சிராக் பாஸ்வான் கட்சித் தலைவரானார். பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் எல்ஜேபி இடம்பெற்றிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு பிஹாரில் நடந்த தேர்தலில் எல்ஜேபி கட்சி 135 இடங்களில் தனித்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. இதனால் கட்சிக்குள் அப்போது முதல் அதிருப்தி நிலவி வருகிறது.

இந்நிலையில், மக்களவையில் சிராக் பாஸ்வான், அவரது உறவினர் பசுபதி குமார் பாராஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்கள் உள்ளனர். எல்ஜேபி மக்களவை குழு தலைவராக சிராக் பாஸ்வான் உள்ளார். இந்நிலையில் சிராக் பாஸ்வானை நீக்கிவிட்டு, மக்களவை குழு தலைவராக பசுபதி குமாரை மற்ற எம்.பி.க்கள் தேர்வு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பசுபதி குமார் நேற்று கூறும்போது, “எங்கள் குழு பாஜக தலைமையிலான என்டிஏ-வில் தொடர்ந்து நீடிக்கும். சிராக் பாஸ்வான் தொடர்ந்து கட்சியில் நீடிக்கலாம். கட்சியை நாங்கள் உடைக்கவில்லை. சிராக் பாஸ்வான் கட்சியின் தேசிய தலைவர். அதில் எங்களுக்கு ஆட்சேபணையில்லை” என்றார். இந்த அறிவிக்குப் பிறகு பசுபதி குமாரை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிராக் பாஸ்வான் நேரில் சந்திக்க முயன்றார். என்றாலும் அவரால் சந்திக்க முடியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

க்ரைம்

22 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்