மே.வங்க தேர்தலுக்கு பிந்தைய வன்முறை : 3 பேர் குழு அமைத்தது உயர் நீதிமன்றம் :

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக 3 உறுப்பினர் குழுவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியான பிறகு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதனை விசாரிக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக 3 பேர் கொண்ட குழுவை அமைத்து நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர். தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை சார்பில் தலா ஒரு பிரதிநிதியும் மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலரும் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்தக் குழு காவல்துறையுடன் ஒருங்கிணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிமை உள்ள இடங்களில் அவர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதனை சரிசெய்ய வேண்டும். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

7 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

42 mins ago

தொழில்நுட்பம்

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்