மாநிலங்களுக்கு மே 1 முதல் ஜூன் 15 வரை 5.86 கோடி டோஸ் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மே 1 முதல் ஜூன் 15 வரை 5.86 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. கடந்த மே 1 முதல் ஜூன் 15 வரையிலான காலத்தில் இந்த விநியோக அளவு 5 கோடியே 86 லட்சத்து 29,000 டோஸ்களாக இருக்கும்.

தாராளமயமாக்கப்பட்ட விலைநிர்ணயம் மற்றும் துரிதப்படுத் தப்பட்ட தேசிய கோவிட்-19 தடுப்பூசி உத்தியை மத்திய அரசு மே 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்படி மத்திய மருந்துகள் ஆய்வகத்தால் (சிடிஎல்) அனுமதி அளிக்கப்பட்ட தடுப்பூசிகளில், சப்ளைக்கு தயாராக இருக்கும் டோஸ்களில் 50 சதவீதம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

இதன்படி, தடுப்பூசி உற்பத் தியாளர்களிடம் இருந்து மாநி லங்கள் ஜூன் இறுதிக்குள் நேரடியாக 4 கோடியே 87 லட்சத்து 55,000 டோஸ்களை பெற முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 15 வரையிலான தடுப்பூசிக்கான திட்டங்களை முன்கூட்டியே வகுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. விநியோ கத்துக்கு தயாராக இருக்கும் தடுப்பூசி டோஸ்கள் குறித்த தகவலை மத்திய அரசு 15 நாட்களுக்கு முன்னதாக வழங்கும் என்று மாநில அதிகாரிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை கூறினார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்