கேரளாவில் நாளை மறுதினம் பினராயி விஜயன் பதவியேற்பு :

By செய்திப்பிரிவு

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான புதிய அரசு நாளை மறுதினம் பதவியேற்கிறது.

மொத்தம் 140 உறுப்பினர் களைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 99 இடங்களுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில் அமைச்சர் பதவி பங்கீட்டை முடிவு செய்வதற்கான எல்டிஎப் கூட்டம் திருவனந்த புரத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு எல்டிஎப் ஒருங்கிணைப்பாளரும் மார்க்சிஸ்ட் இடைக்கால மாநில செயலாளருமான ஏ.விஜயராக வன் கூறியதாவது:

கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான புதிய அரசு நாளை மறுதினம் 20-ம் தேதி பதவியேற்கும். அமைச்சரவை 21 உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும். இதில் மார்க்சிஸ்ட் சார்பில் 12 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 4 பேரும் இடம்பெறுவார்கள்.

கேரள காங்கிரஸ் (எம்), ஜனதா தளம் (எஸ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் தலா ஒருவர் இடம்பெறுவார்கள். எஞ்சிய 2 அமைச்சர் பதவிகளை பிற கூட்டணிக் கட்சிகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ளும். சபாநாயகர் பதவியை மார்க்சிஸ்ட் வைத்துக் கொள்ளும். துணை சபாநாயகர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தலைமை கொறடா பதவி கேரள காங்கிரஸ் (எம்) கட்சிக்கும் வழங்கப்படும். இவ்வாறு ஏ.விஜயராகவன் கூறினார். -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

இந்தியா

27 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

36 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்