மேற்கு வங்கத்தில் 43 அமைச்சர்கள் பதவியேற்பு : முதல்வர் மம்தா வசம் முக்கிய துறைகள்

By செய்திப்பிரிவு

முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் நேற்று 43 அமைச்சர்கள் புதிதாக பதவி யேற்றுக் கொண்டனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்தது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தாலும், முதல்வராக கடந்த 5-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அன்றைய தினத்தில் அவர் மட்டுமே பதவியேற்றார்.

இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் 19 இணையமைச்சர்கள் உள்பட 43 அமைச்சர்கள் நேற்று பதவி யேற்றுக் கொண்டனர். ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களுக்கு ஆளுநர் ஜகதீஷ் தன்கர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் அமித் மித்ரா, பிரத்யா பாசு, ரதின் கோஷ் ஆகியோர் காணொலி மூலம் பதவி ஏற்றுக்கொண்டனர்.

மேலும், மூத்த அமைச்சர்கள் சுப்ரதா முகர்ஜி, பர்தா சாட்டர்ஜி, பிர்ஹத் ஹக்கிம், ஜோதி பிரியா மாலிக், மோலோய் காடக், அரூப் பிஸ்வாஸ், மருத்துவர் சசி பான்ஜா, ஜாவித் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.

மேலும் அசிமா பத்ரா, பார்த்தா பவுமிக் ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்வார் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி, முக்கிய துறைகளான காவல்துறை, சுகாதாரம், நிலம் மற்றும் நில சீர்திருத்தம், செய்தி, கலாச்சார விவகாரம், வட வங்க வளர்ச்சி ஆகியவற்றை தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து

இதனிடையே மேற்கு வங்க மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேரவை கட்சித் தலைவராக சுவேந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை பாஜக மூத்த தலைவரும், மத்திய சட்டத்துறை அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

8 mins ago

வாழ்வியல்

18 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

42 mins ago

சுற்றுச்சூழல்

48 mins ago

தமிழகம்

58 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்