கேரளாவில் நாளை முதல்16-ம் தேதி வரை முழு ஊரடங்கு :

By செய்திப்பிரிவு

கேரளாவில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் 8-ம் தேதி (நாளை) முதல் 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக் கிறது. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 41,953 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 43 ஆயிரத்து 932 ஆக உயர்ந்துள்ளதாக கேரள சுகாதாரத் துறை நேற்று தெரிவித்தது.

பினராயி உத்தரவு

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் 8-ம் தேதி (நாளை) முதல் வரும் 16-ம் தேதி வரை மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் 8-ம் தேதி காலை 6 மணி முதல் 16-ம் தேதி வரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். கரோனா தொற்ின் இரண்டாவது அலையின் கடுமையான தாக்கத்தை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்