காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் (93) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். டெல்லியில் வசித்து வந்த ஜக்மோகன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை மோசமடைந்ததையடுத்து திங்கட்கிழமையன்று அவர் காலமானார். மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றிய ஜக்மோகன், பின்னர், தீவிரவாதம் தலைதூக்கி இருந்த நேரத்தில் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக 1984 முதல் 1989 வரையிலும் மற்றும் 1990-ம் ஆண்டிலும் பணிபுரிந்தார். டெல்லி ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். பாஜகவில் சேர்ந்த அவர் டெல்லியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் அமைச்சராக பணியாற்றினார். ஜக்மோகன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

12 hours ago

மேலும்