விரைவில் வருகிறது ஸ்புட்னிக் வி :

By செய்திப்பிரிவு

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் வி இம்மாத இறுதியில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கோவேக் ஸின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தப்படு கின்றன. ரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்தியாவில் 5 நிறுவனங்கள் இணைந்து ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க உள்ளன. முதல் கட்டமாக இம்மாத இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி குறைந்த அளவுக்கு பயன்பாட்டுக்கு வர உள்ளது. மே மாதம் நிச்சயம் தடுப்பூசி கிடைக்கும் என்றும் ஜூன் மாதம் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி, கரோனாவை தடுப்பதில் 91.6 சதவீதம் பலனளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்