இரவு 8 மணிக்கு மேல் மகாராஷ்ட்ராவில் ஊரடங்கு :

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவின் தற்போதைய ஒட்டுமொத்த தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா 60 சதவீதத்துக்கும் மேல் பங்கு வகிக்கிறது. மேலும் நாட்டின் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை சமீப நாட்களில் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

இதனால் மகாராஷ்ட்ர அரசு இரவு 8 மணிக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. திங்கள் கிழமை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் 8 மணிக்கு மேல் அடைக்கப்படுகின்றன. திடீரென்று ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் கடைகளை அடைப்பது 8 மணிக்கு மேல் சற்று தாமத மாகிறது. போக்குவரத்து பிரச்சி னைகள் காரணமாக மக்களும் வேலையிலிருந்து திரும்பவும் தாமதமாகிறது. இதனால் ஆள்நடமாட்டமில்லாத நிலை ஏற்பட 8.45 அல்லது 9 மணி ஆகிவிடுவதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மிகச்சரியாக 8 மணிக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிப்பார்கள் எனவும் கூறியுள்ளது.

மகாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவைரஸ் தொற்று நாள்தோறும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

17 mins ago

தமிழகம்

54 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்