ஆந்திராவில் நாய்கள் துரத்தியதால் கால்வாயில் விழுந்து பெண் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

ஏலூரு: ஆந்திராவில், நகராட்சி மன்ற தலைவரின் மனைவி நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது தெரு நாய்கள் துரத்தியதால் கோதாவரி கால்வாயில் விழுந்து உயிரிழந்தார்.

ஆந்திராவின், மேற்கு கோதாவரி மாவட்டம், நிடதஓலு நகராட்சி மன்ற தலைவர் பூபதி ஆதிநாராயணா (52). அண்மையில் நடந்த நகராட்சி தேர்தலில் நகராட்சி மன்ற தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மனைவி ஆண்டாள் (49). இவர் நேற்று அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார்.

கோதாவரி தண்ணீர் கால்வாய் ஓரமாக நடந்து சென்றபோது, தெரு நாய்கள் ஆண்டாளை துரத்தின. நாய்களிடம் இருந்து தப்பிக்க அங்குள்ள படித்துறையில் இறங்க முயற்சித்தபோது கால்வாயில் தவறி விழுந்தார். நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த நகராட்சி தலைவர் ஆதிநாராயணா, போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸார் தேடியபோது, உண்ராஜ வரம் கோதாவரி கால்வாயில் ஆண்டாளின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

15 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

28 mins ago

உலகம்

30 mins ago

தமிழகம்

57 mins ago

சினிமா

45 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வணிகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்