கரோனா பரவலை தடுக்க கோவாவில் 144 தடை உத்தரவு :

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவாவில் 144 தடை உத்தரவு அமல் செய்யப் பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. அதன் அண்டை மாநிலமான கோவாவிலும் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் 1,379 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டின் சிறிய மாநிலமான கோவாவில் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஹோலி, ஈஸ்டர், ஈகை திருநாளை பொது இடங்களில் கொண்டாடக்கூடாது. மீறினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏப்ரல் முதல் வாரத்தில் கோவாவில் சிக்மோ உள்ளூர் திருவிழா நடைபெறுவது வழக்கம். கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த திருவிழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் மனோகர் கூறும்போது, "கோவாவில் கரோனா 2-வது அலை தொடங்கியுள்ளது. இதன்காரணமாக சுற்றுலாத் தலங்கள், விடுதிகள், ஓட்டல் களில் கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

தொழில்நுட்பம்

57 mins ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்