பெங்களூருவில் யாசகர்களை அகற்ற தீவிர நடவடிக்கை: மாநகர காவல் ஆணையர் தகவல்

By இரா.வினோத்

பெங்களூருவில் சாலைகளில் யாசகம் எடுப்போரை பிடித்து, மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல்பந்த் கூறியதாவது: பெங்களூருவில் சாலைகளில் யாசகர்கள்தொல்லை அதிகரித்துள்ளதால் தேவையற்ற போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுகின்றன. வழிபாட்டுத் தலங்களில் யாசகர்களின் தொல்லையால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே யாசகர்களை பிடித்து மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப வேண்டும் என தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து கர்நாடக யாசகர்கள் தடுப்புச் சட்டம் 1975-ன்கீழ் யாசகர்களை அகற்றும் பணியில் ஈடுபடுமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். உடனே மண்டல வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நிய மிக்கப்பட்டு யாசகர்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரைபோக்குவரத்து சிக்னல்களில் யாசகம் எடுத்த 100-க்கும் மேற்பட்டோரை பிடித்து இருக்கிறோம். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாகடி சாலையில் உள்ளயாசகர்கள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பியுள்ளோம்.

முதல் தடவை யாசகம் எடுப்பவருக்கு ரூ.1,000 அபராதம் விதித்துள்ளோம். சம்பந்தப்பட்ட நபர் மீண்டும் யாசகம் எடுத்தால் மீட்பு மையத்தில் 3 ஆண்டுகள் அடைக்கப்படுவர். மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பி ஓடுபவர்களைப் பிடித்து சிறையில் அடைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்