10-வது உலக வானொலி தினத்தில்பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆண்டுதோறும் உலக வானொலி தினம் கொண்டாடுவது என கடந்த 2011-ம் ஆண்டு யுனெஸ்கோ முடிவு செய்தது. இதற்கு ஐ.நா.சபை 2012-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. அந்த ஆண்டு முதல் பிப்ரவரி 13-ம் தேதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி, 10-வது உலக வானொலி தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “வானொலியில் புதுமையான மற்றும் இசை தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்குவோருக்கும் அதைக் கேட்போருக்கும் உலக வானொலி தின வாழ்த்துகள். சமூகத்தை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் வானொலி மிகச்சிறந்த ஊடகம். மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் வானொலியின் சாதகமான தாக்கத்தை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்துள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

சுற்றுச்சூழல்

25 mins ago

தமிழகம்

56 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்