விவசாயிகளின் போராட்டம் காலவரையின்றி தொடரும் ராகேஷ் டிகைத் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சம்யுக்த கிசான் மோர்ச்சா சங்க தலைவர் கர்ணம் சிங் சர்னி அண்மையில் கூறும்போது, ‘‘விவசாயிகளின் போராட்டம் வரும் அக்டோபர் வரை நீடிக்கும்’’ என்று தெரிவித்தார். இதுகுறித்து பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் டிகைத்திடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

‘‘கடந்த 2018 அக்டோபர் 2-ம் தேதி காஜிபுர் எல்லையில் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதை கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் காஜிபுர்எல்லையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறோம். இந்தஆண்டும் வழக்கம்போல போராட்டம் நடத்தப்படும். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக எவ்வளவு காலம் போராட்டம் நடத்த வேண்டும் என்பது குறித்து எவ்விதகாலவரையறையும் நிர்ணயிக்க வில்லை. அக்டோபர் வரை போராட்டம் நீடிக்கலாம்’’ என்று ராகேஷ் டிகைத் கூறினார்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட ஹரியாணாவின் கர்னால், ரோட்டக், சிர்சா, ஹிசார், மகாராஷ்டிராவின் அகோலா, ராஜஸ்தானின் சிகார் பகுதிகளில் மகா பஞ்சாயத்துகள் நடைபெற உள்ளன. இதில் பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் டிகைத் கலந்து கொள்கிறார். நாளை முதல் அடுத்தடுத்து 7 மகா பஞ்சாயத்துகளில் அவர் பங்கேற்று பேச உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்