ஒடிசா எல்லையில் பஞ்சாயத்து தேர்தல் நடத்திய ஆந்திரா

By செய்திப்பிரிவு

ஆந்திராவில் 4 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் விஜயநகரம் மாவட்ட எல்லையில் உள்ளஒடிசா மாநிலத்தில் பிரச்சினைக்குரிய 3 பஞ்சாயத்துகளில் ஆந்திரஅரசு பஞ்சாயத்து தேர்தலை நடத்தி முடித்துள்ளது. இது குறித்து நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதை விசாரித்த நீதிமன்றம் விஜயநகரம் ஆட்சியர் மூடே ஹரி ஜவஹர்லால், ஆந்திர தலைமை செயலாளர் ஆதித்யநாத் தாஸ், மற்றும் ஆந்திர மாநில தேர்தல் ஆணையர் ரமேஷ் குமார் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இங்கு ஏற்கெனவே சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களையும் ஆந்திர அரசு நடத்தியதால்தான், பஞ்சாயத்து தேர்தலையும் நடத்தியதாக ஆந்திர அரசு சார்பில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்