மாநில அரசு விமானத்தில் செல்ல மகாராஷ்டிர ஆளுநருக்கு அனுமதி மறுப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று காலை மாநில அரசுக்கு சொந்தமான விமானத்தில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், அரசு விமானம் செல்வதற்கு மாநில அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. ஏற்கெனவே, மாநில அரசின் விமானம் ஆளுநரின் பயணத்துக்காக கோரப்பட்டிருந்ததாகவும் விமானத்தில் சென்று ஆளுநர் அமர்ந்த நிலையில், அரசிடம் இருந்து அனுமதி வரவில்லை என்று விமானி தெரிவித்ததாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னர், தனியாருக்கு சொந்தமான விமானத்தில் டேராடூனுக்கு கோஷ்யாரி புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து தனக்கு முழு விவரம் தெரியாது என்றும் தெரிந்த பிறகே கருத்து சொல்ல முடியும் என்றும் துணை முதல்வர் அஜீத் பவார் தெரிவித்தார். இதனிடையே, பாஜக மூத்த தலைவர் சுதீர் முங்கன்திவார், ‘‘ஆளுநரை அவமதித்தற்காக சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். உள்நோக்கம் இல்லை என்றால் விமானம் செல்ல அனுமதி வழங்காத அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்