கர்நாடக மாநிலம் ஹம்பியில் புரந்தரதாசர் ஆராதனை விழா

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள விட்டாலா விருப்பாக் ஷாகோயிலில் தெய்வப் புலவர் புரந்தரதாசரின் ஆராதனை விழா நேற்று நடைபெற்றது.

உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஹம்பியில் உள்ள விட்டாலா விருப்பாக்ஷா கோயிலில் மகா அமாவாசையை முன்னிட்டு நேற்று தெய்வப் புலவர் புரந்தரதாசரின் ஆராதனை விழா நடைபெற்றது. கன்னட கலை மற்றும் கலாச்சாரத் துறை, புதிதாக உருவாக்கப்பட்ட விஜயநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும், சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நேற்று காலை 8 மணியளவில் துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள விஜய விட்டாலா கோயில் கல் மண்டபத்தில் புரந்தரதாசர் ஞானம் பெற்றதாக நம்பப்படும் இடத்தில் உள்ள அவரது சிற்பத்துக்கு 10-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்தனர். அங்கு புரந்தரதாசரின் வாழ்வையும் கீர்த்தனைகளையும் விளக்கும் விதமான படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

மாலையில் விருப்பாக் �ஷாகோயில் மண்டபத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட கர்னாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்று புரந்தரதாசரின் கீர்த்தனைகளை பாடினர். கரோனா தடுப்பு விதிமுறைகளுடன் நடத்தப்பட்ட இவ்விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பக்திப் பரவசத்துடன் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

10 mins ago

விளையாட்டு

15 mins ago

சுற்றுச்சூழல்

19 mins ago

இந்தியா

30 mins ago

சினிமா

37 mins ago

இந்தியா

33 mins ago

விளையாட்டு

41 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

59 mins ago

க்ரைம்

52 mins ago

இந்தியா

49 mins ago

மேலும்