குடியுரிமை திருத்த சட்ட விதிகள் தயாராவதாக உள்துறை அமைச்சகம் பதில்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தின் விதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளித்தார்.

காங்கிரஸ் உறுப்பினர் திக்விஜய் சிங், குடியுரிமை திருத்த சட்டத்துக்கான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனவா என்று மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் கூறியதாவது: குடியுரிமை சட்டம் 2020 அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கான விதிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சட்ட விதிகளை வகுக்கும் கமிட்டிக்கு விதிகளை வரையறை செய்ய மக்களவையும் மாநிலங்களவையும் முறையே ஏப்ரல் 9-ம் தேதி வரையும் ஜூலை 9-ம் தேதி வரையும் கால அவகாசம் வழங்கி உள்ளன. இவ்வாறு அமைச்சர் நித்தியானந்த் ராய் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

சினிமா

10 mins ago

சுற்றுச்சூழல்

4 mins ago

தமிழகம்

24 mins ago

ஆன்மிகம்

32 mins ago

தமிழகம்

46 mins ago

விளையாட்டு

39 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்