கேரளாவில் 192 பள்ளி மாணவர்கள் 72 ஊழியருக்கு கரோனா பாதிப்பு

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இப்போது கரோனா பரவல் குறைந்து வருவதால், கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, கேரளாவில் கடந்த மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 192 பேர் மற்றும் 72 ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கே.சகீனா கூறும்போது, “முதலில் ஒரு மாணவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மற்றொரு பள்ளியிலும் இதுபோன்ற முறையில்தான் கரோனா பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

கேரளாவில் தொடக்கத்தில் கரோனா பரவல் குறைவாக இருந்தபோதிலும், கடந்த சில மாதங்களாக வேகமாக பரவி வருகிறது. நாட்டிலேயே கேரளாவில்தான் இப்போது தினமும் அதிக அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்