கரோனா தடுப்பூசி அச்சத்தை போக்க விழிப்புணர்வு போஸ்டர்கள் வெளியீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனா தடுப்பு மருந்துகள் செலுத்திக் கொள்வோருக்கு பக்க விளைவு ஏற்படுவதாக தகவல் பரவி வருகிறது. இதனால், மக்கள் மத்தியில் கரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வதில் தயக்கம் நிலவுவதாகத் தெரிகிறது.

இந்த தயக்கத்தையும் அச்சத்தையும் போக்கும் விதமாக, பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் நேற்றுமுன்தினம் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை. எந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்டாலும் லேசான வீக்கம், மிதமான காய்ச்சல் ஆகியவை ஏற்படுவது வழக்கம். அதுபோன்ற பக்க விளைவுகள்தான் கரோனா தடுப்பூசிகளாலும் ஏற்படுகின்றன. கடந்த காலங்களில் சின்னம்மை, போலியோ போன்ற நோய்களை நாம் ஒழித்தோம். தற்போது கரோனா வைரஸை ஒழிப்பதற்காக வெற்றிகரமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எனவே, இந்த தடுப்பூசிகளை மக்கள் எந்த தயக்கமும் இன்றி போட்டுக் கொள்ள வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

37 mins ago

வாழ்வியல்

46 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்