சீனாவுடன் எல்லைப் பிரச்சினை எந்தவிதமான சவாலையும் சந்திக்க ராணுவம் தயார் ராணுவ தளபதி எம்.எம்.நரவானே தகவல்

By செய்திப்பிரிவு

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் எந்தவிதமான சவாலையும் சந்திக்க இந்தியப் படைகள் தயாராக உள்ளன என்று இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்தார்.

இதுகுறித்து மனோஜ் முகுந்த்நரவானே டெல்லியில் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தான், சீனா ஆகியவை சேர்ந்து மிகப்பெரிய அச்சுறுத்தலை எல்லைப் பகுதியில் உருவாக்குகின்றன. அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும். பாகிஸ்தான் தொடர்ந்துதீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது. அதை நாம் சகித்துக் கொள்ள முடியாது. முன்னெச்சரிக்கையாக, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பதிலடி கொடுக்க நமக்கு உரிமை உள்ளது.

எல்லைப் பகுதியானது கடந்தஆண்டு முழுவதுமே சவால் நிறைந்ததாக இருந்தது. பேச்சுவார்த்தையுடன் சவால்களையும் சந்தித்தோம். கரோனா அச்சுறுத்தல் மற்றும் வடக்கு எல்லை சூழ்நிலை ஆகியவை முக்கிய சவாலாக இருக்கிறது. இருந்தபோதும், எல்லைப் பிரச்சினையில் அமைதியான தீர்வையே விரும்புகிறோம். அதேநேரத்தில், எல்லைப் பிரச்சினையில் எந்தவிதமான சவாலையும் சந்திக்க தயாராக உள்ளோம்.

இதற்காக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து விழிப்புடன் நமது வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்