முகக்கவசம் அணியாதவருக்கு சமூக பணி உயர் நீதிமன்ற உத்தரவு நிறுத்தி வைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: முகக்கவசம் அணியாதவர்களை கரோனா சிகிச்சை மையங்களில் சமூகப் பணியில் ஈடுபடுத்தலாம் என குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக குஜராத் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘‘குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவு கடுமையானது, அளவுக்கு மீறியது, அதனை அமல்படுத்தினால் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் என்ற மத்திய, மாநில அரசுகளின் வாதத்தை ஏற்றுக் கொள்கிறோம். உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்கிறோம். சிலர் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றனர். முகக் கசவம் அணியாததற்கு அபராதத்தை அதிகரிப்பது மட்டும் போதாது. விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை உள்ளது. எனவே கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசின் விதிமுறைகளை குஜராத்தில் தீவிரமாக செயல்படுத்த மாநில உள்துறை கூடுதல் செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்