ஊழல் புகாரில் சிக்கியதால் கடும் எதிர்ப்பு பிஹார் கல்வி அமைச்சர் ராஜினாமா

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, அம்மாநில முதல்வராக நிதிஷ் குமார் கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்வர்கள் உட்பட 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதில், கல்வி அமைச்சராக பதவியேற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மேவாலால் சவுத்ரி மீது ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.

இந்த சூழலில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மேவாலால் சவுத்ரிக்கு கல்வி அமைச்சர் பதவி வழங்கியதைக் கண்டித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வந்தன. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து மேவாலால் சவுத்ரி நேற்று ராஜினாமா செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்