வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வதை நிறுத்துங்கள் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற் றது. வாக்கு எண்ணிக்கை நேற்றுநடைபெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாக ம.பி. முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறும்போது, “மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் மோசடி செய்ய முடியாதவை என்பது இன்னமும் நிருபிக்கப்படவில்லை. இந்த தேர்தலில் குறிப்பிட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்களில் மட்டும் மோசடி செய்துள்ளனர்” என்றார். இதேபோல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் உதித் ராஜும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான தனது சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

எந்த தேர்தலில் முடிவுகள் வெளியானாலும், தோல்வியின் பக்கம் உள்ளவர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களை குறை சொல்வதை நிறுத்த வேண்டிய நேரம் இது. எனது அனுபவத்தை பொறுத்த வரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வலுவானவை. மிகச்சரியானவை. நம்பத்தகுந்தவை. இதுதான் எப்போதுமே எனது கருத்து. இதில் நான் உறுதியாக இருக்கிறேன். அனைத்து கட்சிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சந்தேகப்பட கூடியவர்கள் இருக்கிறார்கள்.

குறிப்பாக முடிவுகள் தங்களுக்கு எதிராக வந்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் கூறுகின்றனர். ஆனால் இதுவரை சந்தேகம் தெரிவிப்பவர்கள்அறிவியல்பூர்வமாக தங்கள் வாதத்தை நிருபிக்கவில்லை. எனவே, வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறுவதை முதலில் நிறுத்த வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

விளையாட்டு

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்