கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் 91.68% ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 91.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று 45,231 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82,29,313 ஆக உயர்ந்துள்ளது. இதில் 75,44,798 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 53,285 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 91.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 5,61,908பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 496 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,22,607 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 5,369 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,83,775 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,14,079 பேர் குணமடைந்துள்ளனர். 1,25,672 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 3,652 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,27,064 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,65,261 பேர் குணமடைந்துள்ளனர். 50,611 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திராவில் புதிதாக 2,618பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 8,25,966 பேர் பாதிக்கப்பட்டு, 7,95,592 பேர் குணமடைந்துள்ளனர். 23,668 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் புதிதாக 1,969 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,83,832 பேர் பாதிக்கப்பட்டு 4,53,458 பேர் குணமடைந்துள்ளனர். 23,323 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் நேற்று 4,138 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 4,44,268 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,55,943 பேர் குணமடைந்துள்ளனர். 86,681 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் 12 லட்சம் பேர் மரணம்

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 69 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 3 கோடியே 28 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 12 லட்சத்து 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 2.36 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்து இந்தியாவில் 1.22 லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். பிரேசிலில் 1.6 லட்சம் பேர்,மெக்ஸிகோவில் 91,895 பேர் , பிரிட்டனில் 46,717 பேர், பிரான்ஸில் 37,019 பேர், ஸ்பெயினில் 35,878 பேர், கம்போடியாவில் 31,515 பேர், அர்ஜென்டினாவில் 31,140 பேர், ரஷ்யாவில் 28,473 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ்மீண்டும் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. வைரஸை கட்டுப்படுத்த பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

51 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்