சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளில் குடியரசு தலைவர் உள்ளிட்டோர் மரியாதை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் வல்லபபாய் படேலின் 145-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இவரது பிறந்த நாள் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியின் படேல் சவுக் பகுதியில் உள்ள வல்லபபாய் படேல் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று மலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் படேல் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "சுதந்திரத்துக்குப் பிறகு, பல துண்டுகளாக சிதறிக் கிடந்த நூற்றுக்கணக்கான சிற்றரசுகளை இந்தியாவுடன் இணைத்தவர் படேல். இன்றைய வலிமையான இந்தியாவுக்கு அன்றே அவர் அடிக்கல் நாட்டினார். நாட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை இந்தியர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். சர்தார் படேலின் உறுதிமிக்க தலைமையும் தேசபக்தியும் நம்மை தொடர்ந்து வழிநடத்தும்" என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

50 mins ago

சினிமா

40 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

2 hours ago

மேலும்