பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து - காங்கிரஸ் நாளை நாடு தழுவிய போராட்டம் :

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சி நாளை (ஜூன் 11) போராட்டம் நடத்த உள்ளது.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலைநாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல நகரங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்த விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பு நாளை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிஸ் மாநில தலைவர்களுக்கு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பலமாநிலங்களில் பெட்ரோல் விலைரூ.100-ஐ கடந்துள்ளது. பொருளாதார மந்தநிலை, வேலை இழப்பு,ஊதியக் குறைப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெட்ரோல், டீசலின் கட்டுப்பாடற்ற விலை உயர்வு, மக்கள் மீதுமேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த விலை உயர்வைக் கண்டித்து கட்சியின் அனைத்து மாநிலப் பிரிவுகளும் துணை அமைப்புகளும் நாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்கள் முன்பு ஜூன் 11-ம் தேதி போராட்டம் நடத்தவேண்டும். கட்சியின் மூத்த தலைவர்களும் இதில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னையில் கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், எம்.பி., எம்எல்ஏக்கள் அவசியம் பங்கேற்க வேண்டும். சென்னையில் நடக்கும்போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

44 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்