கேரள புதிய அமைச்சரவையில் - முதல்வரின் மருமகன் உட்பட 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு : இப்போதைய அமைச்சர்கள் யாரும் இடம்பெறவில்லை

By செய்திப்பிரிவு

கேரள புதிய அமைச்சரவையில் முதல்வரின் மருமகன் உள்ளிட்ட 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கே.கே.சைலஜா உள்ளிட்ட இப்போதைய அமைச்சர்கள் அனைவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது சாரி கூட்டணி மீண்டும் வெற்றி பெற் றது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இளமாறன் கரீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் பேரவைக் குழு தலைவராக முதல்வர் பினராயி விஜயன் தேர்ந்தெடுக் கப்பட்டார். இவர் நாளை 2-வது முறையாக முதல்வராக பதவி யேற்க உள்ளார்.

பினராயி விஜயன் தலைமை யிலான புதிய அமைச்சரவையில், எம்.வி.கோவிந்தன், கே.ராதா கிருஷ்ணன், கே.என்.பலகோபால், பி.ராஜீவ், வி.என்.வசவன், சாஜி செரியன், வி.சிவன் குட்டி, முகமது ரியாஸ் (முதல்வரின் மருமகன்), டாக்டர் ஆர்.பிந்து, வீனா ஜார்ஜ் மற்றும் வி.அப்துல் ரஹ்மான் ஆகியோர் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்க கட்சி முடிவு செய்ததால், சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள கே.கே.சைலஜா உட்பட இப்போதைய அரசில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் வாய்ப்பு மறுக் கப்பட்டுள்ளது. எனினும், கட்சிக் கொறடாவாக சைலஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுபோல, பேரவைத் தலைவர் வேட்பாளராக எம்.பி.ராஜேஷ் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஏ.என்.ஷம்சீர் கூறும் போது, “இப்போதைய அமைச் சரவையில் உள்ளவர்களில் முதல் வர் பினராயி விஜயன் மட்டுமே புதிய அமைச்சரவையில் இடம்பெறு வார். மற்ற 11 அமைச்சர்களும் புதுமுகங்கள். இளையவர்கள் மற் றும் அனுபவம் வாய்ந்தவர்களின் கலவையாக புதிய அமைச்சரவை இருக்கும். இது கட்சியின் ஒருமித்த முடிவு ஆகும்” என்றார்.

இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பினராயி விஜயன், கோடியேறி பாலகிருஷ்ணன், எம்.ஏ.பேபி பங்கேற்றனர்.

இதுதவிர, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 4 பேர், கேரள காங்கிரஸ் (எம்) மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறுவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

உலகம்

5 hours ago

மேலும்