கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வு : ஏழைகளை பாதிக்காது என அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதை தயாரிக்கும் சீரம் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதன்படி மாநில அரசுகளுக்கு ரூ.400 என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்றும் விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் 45 வயதுக்கு மேற்பட் டோருக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப் பட்டு வருகின்றன. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோ ருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்போது தடுப்பூசிகள் அரசு மருத்துவமனை களில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250க்கும் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. கோவிஷீல்டு தடுப் பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம் ஒரு டோஸ் ரூ.250க்கு விற்பனை செய்து வந்தது.

இந்நிலையில், தடுப்பூசி தயா ரிக்கும் நிறுவனங்கள் தாங்களே விலையை நிர்ணயிக்கலாம் என்றும் தயாரிக்கப்படும் தடுப்பூசியில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும் மீதி 50 சதவீதத்தை மாநில அரசுகள் மற்றும் பொதுச் சந்தையிலும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் விற்கலாம் என்றும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

அதன்படி, ஒரு டோஸ் கோவி ஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.400 என்றும் தனியார் மருத்துவமனை களுக்கு ரூ.600 என்றும் உயர்த் தப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வரும் நிலை யில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள தாகவும் உலக நாடுகளில் தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.750 முதல் ரூ.1,500 வரை விற்கப்படுவதாகவும் அதோடு ஒப்பிடுகையில் இந்தியா வில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை மலிவு என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏழைகளை பாதிக்காது

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை உயர்த்தப்பட்டபோதும் அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு தடுப்பூசி தொடர்ந்து இலவசமாகவே போடப்படும். நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடியும் அரசு மருத்துவமனைகளில் மக் களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்பதை உறுதிப் படுத்தினார். எனவே, கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிக்காது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

மேலும்