கரோனா தடுப்பு முயற்சிகள் பலன் அளிக்காவிட்டால் - இரவு நேர ஊரடங்கு அமலாகும் : கட்டுப்பாடுகளும் கடுமையாகும் : பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

அரசின் தற்போதைய கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு பலன் கிடைக்காவிட் டால், இரவு நேர ஊரடங்கு அமல்படுத் தப்படும். கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறி வித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று (ஏப்.10) முதல் அமலுக்கு வருகின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்றின் தற்போதைய நிலை குறித்தும் அதை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பதற்காக எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கடந்த 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ‘‘கரோனா உச்சமடைவது மீண்டும் ஒரு சவாலான நிலையை உரு வாக்கி வருகிறது. கடந்த ஆண்டை போல, அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும். தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர் பில் இருந்தவர்களை கண்டறிந்து சோதனை செய்து உடனடி சிகிச்சை அளிப்பதுதான் நோய்ப் பரவலை கட் டுப்படுத்த சிறந்த வழி. சோதனையை அதிகப்படுத்துவதுடன், தடுப்பூசியை அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைந்து செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.

தமிழகத்தை பொறுத்தவரை கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசால் அனைத்து முற்சிகளும் எடுக் கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நோய்த் தொற்று விகிதம் மற்றும் இறப்பவர்கள் எண்ணிக்கை பிப்ரவரி வரை குறைந்து வந்த நிலையில், ஏப்ரலில் சராசரியாக 3,900 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்படுகிறது.

மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள், நடமாடும் காய்ச்சல் முகாம் கள், பரிசோதனை மையங்கள் ஏற்படுத் தப்பட்டு நோய் உறுதி செய்யப்படு பவர்கள் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்படுகின்றனர். முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு தண்டனை அளிக்கப்படுகிறது. கரோனா விதி களை மீறியதாக கடந்த மார்ச் 16 முதல் இதுவரை 1 லட்சத்து 36,667 பேர் கண்டறியப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.2.88 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 8-ம் தேதி வரை 31.26 லட்சம் பேருக்கு முதல் தவணை, 3.61 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமே அனைத்து மாவட்டங்களிலும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 2.01 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் தினமும் 3 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப் படுகிறது. இப்பணிகளை முடுக்கிவிட, சென்னை மாநகராட்சியில் 15 களப் பணி குழுக்கள், அனைத்து மாவட்டங் களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏப்.14 முதல் 16 வரை அந்தந்த மாவட்டங்களில் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள், சுகா தாரம் மற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி திருவிழா அறிவித்து கரோனா தடுப்பூசி போடு வதற்கான நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

அரசு எடுத்துவரும் நடவடிக்கை கள் காரணமாக தற்போது தமிழகத் தில் கரோனா தொற்று ஏற்பட்டவர் களில் 95.55 சதவீதம் பேர் குணமடைந் துள்ளனர். 1.41 சதவீதம் என குறைந்த இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டும் பொதுமக்கள் நலன் கருதியும் ஏப்ரல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை சில தளர்வு களுடன் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே அனுமதிக்கப் பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு இன்று (ஏப்.10) முதல் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளு டன் அனுமதி அளித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சியில் பலன் கிடைக்க வில்லை என்றால் இரவு நேரத்தில் கரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும். தமி ழகத்தில் கரோனா நோய்த் தொற்று பர வலைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

38 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்