சத்தீஸ்கரில் தேடுதல் வேட்டையின்போது மாவோயிஸ்ட் தாக்குதல் - 22 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு : குடியரசுத் தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி இரங்கல்

By செய்திப்பிரிவு

சத்தீஸ்கரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்ட்கள் பயங்கர தாக்கு தல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 22 வீரர்கள் உயிரிழந் தனர். மேலும் ஒரு வீரரை காண வில்லை. உயிரிழந்தோரின் குடும் பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந் திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம், மாவோ யிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக விளங்கு கிறது. இங்கு கடந்த 2013-ம் ஆண்டு மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்கு தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் வழக்கில் தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட் முக்கியத் தலைவரான மத்வி ஹித்மா, பீஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களுக்கு உட்பட்ட பஸ்தார் வனப்பகுதிகளில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், கடந்த 2-ம் தேதி இரவு டாரம், உசூர், பமத் (பீஜப்பூர்) மின்பா மற்றும் நரசபுரம் (சுக்மா) ஆகிய 5 பகுதி களில் இருந்து தனித்தனி குழுக் களாக புறப்பட்ட சுமார் 2 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரர்கள், வனப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். டாரம் பகுதியில் இருந்து சென்ற வீரர்களை, 3-ம் தேதி ஜோனகுடா அருகே உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் சுற்றிவளைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படை யினரும் பதில் தாக்குல் நடத்தினர். சுமார் 3 மணி நேர துப்பாக்கிச் சண் டைக்குப் பிறகு மாவோயிஸ்ட்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். தாக்கு தலில் உயிரிழந்த 5 வீரர்களின் உடல்களை மீட்டனர். காயமடைந்த 30 வீரர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். 18 வீரர்கள் காணாமல் போயினர்.

இந்நிலையில், சண்டை நடந்த பகுதியில் இருந்து நேற்று மேலும் 17 வீரர்களின் உடல்கள் கைப்பற் றப்பட்டன. இதையடுத்து இந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித் துள்ளதாக சத்தீஸ்கர் காவல்துறை இயக்குநர் (மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கை குழு) அசோக் ஜுனேஜா நேற்று தெரிவித்தார். மேலும் ஒரு வீரரைக் காணவில்லை என்றும் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பெண் மாவோயிஸ்ட் உயிரிழப்பு

கடந்த சில ஆண்டுகளில் பாது காப்புப் படையினர் மீது நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று என கருதப்படு கிறது. இந்தத் தாக்குதலில் மாவோ யிஸ்ட்கள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், ஒரே ஒரு பெண் மாவோயிஸ்ட் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சண்டையின்போது மாவோ யிஸ்ட்கள் எத்தகைய துப்பாக்கி களை பயன்படுத்தினார்கள் என்ற விவரமும் உடனடியாக தெரிய வில்லை. மேலும், உயிரிழந்த வீரர் களிடம் இருந்த துப்பாக்கிகளை மாவோயிஸ்ட்கள் எடுத்துச் சென்று விட்டதாக சிஆர்பிஎப் தரப்பில் கூறப்படுகிறது.

பாதுகாப்புப் படையினரை தங்கள் இடத்துக்கு வரவழைத்து தாக்குதல் நடத்தும் திட்டத்துடன், தங்கள் இருப்பிடம் குறித்த தகவலை மாவோயிஸ்ட்கள் வேண்டுமென்றே கசியவிட்டார் களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள் ளது. இதுபோல, மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவரான ஹித்மாவை பாதுகாக்கும் அடுக்குகளில் ஒன்றை பாதுகாப்புப் படையினர் நெருங்கியதே இவ்வளவு பெரிய தாக்குதலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக ஹித்மாவின் பாது காப்பு கவசம், அவர் இருக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவு வரை பரவி இருக்கும். தற்போது துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்துக்கு மிக அருகிலேயே ஹித்மா இருந்திருக்கலாம் என்றும், அதனா லேயே அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அமித் ஷா ஆலோசனை

மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு அவசரமாக நேற்று டெல்லி திரும்பினார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலை தொலை பேசியில் தொடர்புகொண்டு, நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய, மாநில அரசுகள் இணைந்து மவோயிஸ்ட்களுக்கு எதிராக போரிடு வோம் என அமித் ஷா தெரிவித்தார். தாக்குதல் நடந்த பகுதிக்கு விரைந்து செல்லுமாறு சிஆர்பிஎப் இயக்குநர் குல்தீப் சீங்குக்கு அமித் ஷா உத்தரவிட்டார்.

முன்னதாக, அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான போரில் வீரமரணமடைத வீரர் களின் தியாகத்துக்கு தலைவணங்கு கிறேன். இவர்களுடைய வீரத்தை நாடு ஒருபோதும் மறக்காது. உயி ரிழந்த வீரர்களின் குடும்பத்தின ருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன். காயமடைந் தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். வளர்ச் சிக்கும் மக்களுக்கும் எதிரான போர் தொடரும்’ என பதிவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பதிவில், ‘சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலில் வீரர்கள் உயிரிழந்த தகவல் மனவேதனை தருகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீரர்களின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது’ என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த் தனை செய்கிறேன்’ என பதி விட்டுள்ளார்.

சத்தீஸ்கரில் நடந்த துப்பாக்கிச் சண்டை குறித்து அம்மாநில காவல் துறை, முதல்வர் புபேஷ் பாகேலிடம் இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இதையடுத்து, அந்த அறிக்கை மத்திய உள் துறை அமைச்சகத்துக்கும் இன்றே அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்