சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் நாளை முதல் குறைக்கப் படுகிறது. அதிகபட்ச கட்டணம் ரூ.70-ல் இருந்து 50 ஆக குறைக்கப் பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கை:
சென்னை மாநகரத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்த பல்வேறு சிறப்பான உள்கட்டமைப்பு திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகுத்து செயல் படுத்தினார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கினார்.
7 கோடியே 25 லட்சம் பயணிகள்
மெட்ரோ ரயில் சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்தும் வகையில், அதன் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக் கப்படுகிறது.
தற்போது 2 கி.மீ. வரை ரூ.10 என்ற கட்டணத்தில் மாற்றமில்லை. 2 முதல் 5 கி.மீ வரை 20 ரூபாய், 5 முதல் 12 கி.மீ. வரை 30 ரூபாய், 12 முதல் 21 கி.மீ. வரை 40 ரூபாய், 21 முதல் 32 கி.மீ. வரை 50 ரூபாய் என புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
l கியூ ஆர் கோடு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொடுதல் இல்லா மதிப்புக்கூட்டு பயண அட்டை மூலம் பயணிப் பவர்களுக்கு மேலும் கூடுத லாக அனைத்து பயணச் சீட்டு களுக்கும் அடிப்படை கட்டணத் தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.
l ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயண கட்டணம், 45 கி.மீ. வழித்தடப் பகுதிகளுக்கு ரூ.100 ஆக உள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள வண்ணாரப் பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்துக்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீட்டருக்கும் அதே ரூ.100 கட்டணமே நிர்ண யிக்கப்பட்டுள்ளது.
l அதேபோல ஒரு மாத வரையறுக்கப்படாத மெட்ரோ பயண கட்டணம் தற்போது 45 கி.மீ. வழித்தடப் பகுதிகளுக்கு ரூ.2,500 ஆக உள்ளது. வண் ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத் துக்கும் அதே ரூ.2,500 கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
l ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வரையறுக்கப்படாத பயண அனுமதி சீட்டுகள், வரை யறுக்கப்பட்ட நாட்களில் செல்லு படியாகும் அனுமதிச் சீட்டுகள் தவிர மற்ற பயணத்துக்கு கட் டணத்தில் இருந்து 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.
இந்த உத்தரவு பிப்.22-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டணக் குறைப்பை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பயணங் களை குறைந்த செலவில் நிறை வாக மேற்கொள்ளலாம்.
இவ்வாறு முதல்வர் தெரி வித்துள்ளார்.
அதிகபட்ச கட்டணம்
குறைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் கட்டணங்களை பொறுத்த வரை, 5 கி.மீ. வரை பயணிப் போருக்கு ரூ.30 என இருந்தது, தற்போது ரூ.20 ஆக குறைக்கப் பட்டுள்ளது. 12 கி.மீ. வரை பய ணிப்போர் முன்பு ரூ.40 செலுத்த வேண்டும். அந்த கட்டணம் தற் போது ரூ.30 ஆக குறைக்கப் பட்டுள்ளது. 12 முதல் 18 கி.மீ. வரை ரூ.50-ம், 18 முதல் முதல் 24 கி.மீ வரை பயணிப்போர் ரூ.60-ம் செலுத்த வேண்டியிருந்தது. தற் போது 12 முதல் 21 கி.மீ. வரை ரூ.40 ஆக குறைக்கப்பட்டுள்ளது.முன்பு 24 கி.மீ.க்கு மேல் ரூ.70 என்பது அதிகபட்ச கட்டணமாக இருந்தது. தற்போது அதை 21 முதல் 32 கி.மீ, வரை என மாற்றி ரூ.50 ஆக கட்டணம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 32 கி.மீ வரை பயணிப்போருக்கு ரூ.20 மிச்சமாகும். ஆனால், விம்கோ நகர் வரையிலான 54 கி.மீ. தூரத் துக்கான முழுமையான கட்டணம் குறிப்பிடப்படவில்லை.
தற்போதைய கட்டணம்2 கி.மீ. வரைரூ.102 முதல் 4 கி.மீ. வரைரூ.204 முதல் 6 கி.மீ. வரைரூ.306 முதல் 12 கி.மீ. வரைரூ.4012 முதல் 18 கி.மீ. வரைரூ.5018 முதல் 24 கி.மீ. வரைரூ.6024 கி.மீட்டருக்கு மேல்ரூ.70புதிய கட்டணம்2 கி.மீ. வரைரூ.102 முதல் 5 கி.மீ. வரைரூ.205 முதல் 12 கி.மீ. வரைரூ.3012 முதல் 21 கி.மீ. வரைரூ.4021 முதல் 32 கி.மீ. வரைரூ.50
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
ஓடிடி களம்
8 mins ago
விளையாட்டு
23 mins ago
சினிமா
25 mins ago
உலகம்
39 mins ago
விளையாட்டு
46 mins ago
ஜோதிடம்
28 mins ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago