பேரவை தேர்தல் பணிக்காக இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவுக்கு உதவும் வகையில், இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக டி.ஆனந்த், அஜய் யாதவ் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளி யாக உள்ளது. ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது. இந்நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையிலான அதிகாரி கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் சென்னை வந்து தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். அப்போது, தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். மேலும், தமிழகத்துக்கு கூடுதலாக 2 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்படுவதாகவும், வெளிப்படை யான, நேர்மையான தேர்தலை நடத்த உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உதவும் வகையில், இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக நியமிக்கப்படும் தேதியில் இருந்து ஓராண் டுக்கு பணியாற்றும் வகையில், இணை தலைமை தேர்தல் அதிகாரி (பொதுத் தேர்தல்), இணை தலைமை தேர்தல் அதிகாரி (தகவல் தொழில்நுட்பம்) என இரு தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. வேளாண்மைத் துறை இணை செயலாள ராக உள்ள டி.ஆனந்த், இணை தலைமை தேர்தல் அதிகாரி (பொது தேர்தல்) என்ற பதவியிலும், சுகாதாரத் துறை இணை செயலராக உள்ள அஜய் யாதவ், இணை தலைமை தேர்தல் அதிகாரி (தகவல் தொழில் நுட்பம்) என்ற பதவியிலும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 mins ago

இந்தியா

42 mins ago

கருத்துப் பேழை

35 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்