வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் தந்தால் கடும் நடவடிக்கை தமிழகம், புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை களுக்கு ஒரே நாளில் தேர்தல் நடக்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணை யம் முடுக்கி விட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடு களை ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார், கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஷேபாலி சரண், பொதுச்செயலர் உமேஷ் சின்கா, துணைத் தேர்தல் ஆணையர் சந்திர பூஷன்குமார், இயக்குநர் பங்கஜ் வத்ஸவா, செயலர் மலேய் மாலிக் ஆகியோர் கடந்த 10-ம் தேதி சென்னை வந்தனர். தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அதிகாரிகள், தேர்தல் துறை அதிகாரிகளுடன் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினர். தேர்தல் தேதி தொடர்பாக அனைவரது கருத்துகளையும் கேட்டறிந்தனர்.

புதுச்சேரியில் ஆலோசனை

இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைய குழுவினர் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தனர். புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர், தேர் தல் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினர்.

இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தினர். பின்னர், நேற்று மதியம் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களைச் சந்தித் தார். அப்போது அவர் கூறியதாவது:

புதுச்சேரியில் வியாழக்கிழமை மாலை அங்கீகரிக்கப்பட்ட 10 அர சியல் கட்சிகள், தேர்தல் நடத்தும் அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். பின்னர் தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி னோம்.

புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 84.08 சதவீதம் வாக்குகளும், மக்களவைத் தேர்தலில் 81 சதவீத வாக்குகளும் பதிவானது. எழுத்தறிவு சதவீதமும், விழிப்புணர்வும் அதிகம் என்பதால் வாக்கு சதவீதம் புதுச் சேரியில் அதிகமாக இருக்கும். எவ்வித பாரபட்சமும் இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் தேர்தலை நடத்துவோம்.

கட்சிகள் கோரிக்கை

புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் விவகாரம், தமிழகம், புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, வெளிநாட்டு இந்தியர்களுக்கு ஆன் லைனில் வாக்குரிமை தருவது, வாக் காளர் பட்டியலில் குளறுபடிகளை சரி செய்வது ஆகிய கோரிக்கைகளை அரசியல் கட்சியினர் முன்வைத் துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த் தல், நீக்கம் தொடர்பாக 7 நாட்கள் அவகாசம் அளித்து சரி செய்ய வேண்டும். உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்ட பிறகே சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகமும் புதுச்சேரியும் ஒருங் கிணைந்து இருப்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும். அதனால், இரு மாநிலங்களிலும் ஒரே நாளில் தேர்தல் நடக்கும்.

1,564 வாக்குச் சாவடிகள்

கரோனா காரணமாக புதுச்சேரியில் 952 ஆக உள்ள வாக்குச்சாவடிகளை 1,564 ஆக உயர்த்தியுள்ளோம். தேர் தல் பணியாற்றும் முன்களப் பணியாளர் களுக்கு முன்னுரிமை தந்து கரோனா தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது. அதை செயல்படுத்த தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

புதுச்சேரியிலும், தமிழகத்திலும் தற்போது மது விலையில் மாற்றமில்லை. தேர்தல் நேரத்தில் அண்டை மாவட்டங் களுக்கு புதுச்சேரியில் இருந்து மது மற்றும் சாராயம் கடத்தப்படுவதை தடுக்க கிடங்குகளில் மது வகைகள் இருப்பு ஆய்வு செய்யப்படும். இலவசப் பொருட்கள், வேட்டி,சேலை, பரிசுப் பொருட்கள் ஆகியவை பதுக்கப்பட் டுள்ளதா என்றும் ஆய்வு செய்யப் படும். இதற்காக கலால் துறை, அம லாக்கத்துறை மற்றும் இது தொடர்பான துறை அதிகாரிகளிடம் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

ஏற்கெனவே பணம், பரிசுப் பொருள் தந்ததற்காக தமிழகத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் விநியோகம் செய்வதைத் தடுக்க தேர் தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும்.

அடுத்தாக கேரளாவுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளோம். அங்கிருந்து டெல்லி திரும்பிய பிறகு, வரும் 16-ம் தேதி மத்திய வருமானவரித் துறை, சுங்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி 5 மாநில தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்