பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

கோவை அருகே நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பான வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

கோவை அருகே 19 வயது மாணவியிடம் முகநூல் மூலமாகப் பழகி, ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் கொடுமை செய்ததாக சில இளைஞர்கள் மீது 2018 டிசம்பர் மாதம் புகார் கூறப்பட்டது. மேலும், மாணவிகள், இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என ஏராள மானோரை மிரட்டியும், கட்டாயப் படுத்தியும் பாலியல் கொடுமை செய்ததாகவும், அதை செல்போன் மூலம் வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகள், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி, காவல் துறையில் புகார் செய்தார். இதுகுறித்து பொள் ளாச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாக்கினாம்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு, ஜோதிநகர் ரிஸ்வான் என்ற சபரிராஜன், பக்கோதிபாளையம் வசந்தகுமார், சூளேஸ்வரன்பட்டி சதீஷ், ஆச்சிப்பட்டி மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், புகார் அளித்த மாணவியின் சகோதரரைத் தாக்கியதாக பார் நாகராஜன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

2019 பிப்ரவரியில் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. கடந்த 2019 ஏப்ரல் மாதம் இவ் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள், பாலியல் விவகாரம், அடிதடி தொடர்பாக மேலும் இரு வழக்குகள் பதிவு செய்து, திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரை மீண்டும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத் தனர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் அண்மையில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே, இந்த கும்ப லால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் கொடுத் தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலமும் அளித்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பொள்ளாச்சி வடுக பாளையத்தைச் சேர்ந்த அருளா னந்தம், பாபு, ஆச்சிப்பட்டி ஹேரேன்பால் ஆகியோருக்கும் இவ்வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள அரு ளானந்தம், அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் ஆவார்.

மூவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய பின்னர், நேற்று காலை கோவையில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்களிடம் விசா ரணை நடத்திய நீதிபதி நந்தினி தேவி, வரும் 20-ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு உத்தர விட்டார். இதன்படி, அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும், அவர்களது செல்போன்களை ஆய்வு செய்யவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பெண்கள் ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே, கைது செய்யப் பட்ட மூவரும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, திமுக மகளிர் அணி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் முன் கூடி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

அதிமுகவில் இருந்து நீக்கம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு:

கழகத்தின் கொள்கை குறிக் கோள்களுக்கும் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப் பாட்டை மீறி, களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் பொள்ளாச்சி நகர மாணவரணி செயலர் கே.அருளானந்தம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சித் தொண் டர்கள் யாரும் இவருடன் எவ் விதத் தொடர்பும் வைத்துக் கொள் ளக்கூடாது. இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்