வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யும் பரிந்துரைகள் நிராகரிப்பு நாடுமுழுவதும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதாக மத்திய அரசு தெரிவித்த பரிந்துரைகளை விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளன. 3 சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் அறி வித்துள்ளன.

இதற்கிடையே, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று முன்தினம் நாடுதழு விய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

அன்றிரவு 13 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று அவர் உறுதிபட கூறினார். எனினும் சில உறுதிமொழிகளை எழுத்துபூர்வமாக அவர் வழங்கினார்.

அதில் கூறப்பட்டிருந்ததாவது:

குறைந்தபட்ச ஆதரவு விலை திட் டம் தொடரும். வேளாண் சந்தைகள் தொடர்ந்து செயல்படும். மாநில அரசு களும் தனியார் வேளாண் சந்தைகளை பதிவு செய்யலாம். செஸ் வரி விதிக்கலாம்.

பான் கார்டு வைத்துள்ள யார் வேண்டுமானாலும் வேளாண் வர்த்த கத்தில் ஈடுபடலாம் என்ற விதியின் காரணமாக மோசடிகள் நடைபெற லாம் என்று விவசாயிகள் அச்சம் தெரி வித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மோசடிகளை தடுக்க மாநில அரசு களுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

ஒப்பந்த பயிர் சாகுபடி திட்டத்தில், விவசாயிகளின் நிலஉரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளின் மின் கட்டண நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படாது. உரிமையியல் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர் வதற்கு ஏதுவாக வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.

வேளாண் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும். இந்த பிரச்சினைக்கு விரைவில் சுமுக தீர்வு காணப்படும்.

இவ்வாறு அமித் ஷா தரப்பில் எழுத்து பூர்வமாக உறுதிமொழி அளிக்கப்பட் டது. இதற்கேற்ப வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலித்து முடிவு எடுப்பதாக விவசாய சங்கங்கள் பதில் அளித்தன.

நிலைப்பாட்டில் உறுதி

மத்திய அரசின் பரிந்துரைகள் தொடர்பாக விவசாய சங்கங்களின் தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு கிராந்திகரி கிஷான் சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் கூறியதாவது:

மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இதேபோல நாங்களும் எங்களது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருக்கிறோம். மத்திய அரசின் பரிந்துரைகளை நிரா கரிக்கிறோம். வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதை விரும்ப வில்லை. எங்களைப் பொறுத்தவரை 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

டெல்லியில் எங்களது போராட் டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

வரும் 12-ம் தேதி டெல்லி - ஜெய்ப் பூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட் டத்தில் ஈடுபடுவோம். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடு வோம். 14-ம் தேதி மீண்டும் நாடுதழு விய போராட்டத்தில் ஈடுபடுவோம். இதற்கு அனைத்து விவசாய சங்கங் களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாரதிய கிஷான் சங்க தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் கூறும்போது, ‘‘நாங்கள் டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம். மத்திய அரசு பிடிவாதமாக இருந்தால் நாங் களும் அதே அணுகுமுறையை கடை பிடிப்போம். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இதுவே எங்களது இறுதி கோரிக்கை’’ என்றார்.

மத்திய அரசின் பரிந்துரைகளை விவசாய சங்கங்கள் நிராகரித்த நிலை யில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் டெல்லியில் நேற்று முக்கிய ஆலோ சனை நடத்தினர். அமித் ஷா வீட்டில் நடந்த இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

விவசாயிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 24 கட்சிகள் ஆதரவு அளித்தன. அந்த கட்சிகள் சார்பில் குடி யரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா, திமுக எம்.பி. இளங்கோவன் ஆகிய 5 பேர் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.

இதன்பின் ராகுல் காந்தி கூறும் போது, "நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இன்றி வேளாண் சட்டங் கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்கள், விவசாயிகளுக்கு எதி ரானது. வேளாண் சட்டங்கள் பலன் அளிக்கும் என்றால் லட்சக்கணக்கான விவசாயிகள் ஏன் சாலையில் இறங்கி போராட வேண்டும். 3 வேளாண் சட்டங் களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

விளையாட்டு

40 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்