மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சென்னை வருகை பேரவை தேர்தல் குறித்து பாஜகவினருடன் ஆலோசனை

By செய்திப்பிரிவு

நாளை சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக பாஜகவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (நவ.21) சென்னை வருகிறார். காலை 10.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அவர், பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந் தடைகிறார். அங்கு அவருக்கு தமி ழக அரசு மற்றும் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங் கிருந்து சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு ஓய்வெடுக்கும் அவர், மாலை 4.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கலைவாணர் அரங்கம் வருகிறார்.

கலைவாணர் அரங்கில் 4.30 முதல் 6 மணி வரை தமிழக அரசின் சார்பில் நடக்கும் தேர்வாய்க்கண் டிகை நீர்த்தேக்கம் அர்ப்பணிப்பு, ரூ.67 ஆயிரம் கோடியிலான மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப் பணிகள், சென்னை வர்த்தக மைய விரிவாக்கம், இந்தியன் ஆயில் நிறுவன திட்டப்பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் லீலா பேலஸ் ஓட்டலுக்கு வரும் அவர், இரவு 7 மணிக்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு 8.30 மணிக்கு அமித் ஷா தலைமையில் பாஜக உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக பாஜக நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி, சட்டப்பேரவைத் தேர்தல் பணி கள் குறி்த்து ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. அத்துடன், கூட்டணி தொடர்பாக அதிமுக தலைமையுடன் அமித் ஷா பேசு வார் என்றும் கூறப்படுகிறது.

நாளை இரவு சென்னையில் தங்கும் அவர், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்