மருந்துகளை இலவசமாக பெறலாம் மத்திய அரசின் 'இ-சஞ்சீவனி' திட்டத்தில் ஆலோசனை பெறுவதில் தமிழகம் முதலிடம் இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்

By செய்திப்பிரிவு

‘இ-சஞ்சீவனி' திட்டத்தில் நாடு முழுவதும் இதுவரை 6 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆலோ சனை பெறுவதில் தமிழகம் முத லிடத்தில் உள்ளது. இத்திட்டத் தில் இலவசமாக மருந்துகள் விநி யோகம் செய்யப்பட்டிருக்கின்றன.

மத்திய அரசு சார்பில் கடந்த 2018 செப்டம்பரில் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 2019 நவம்பரில் ‘இ-சஞ்சீவனி' தொலை மருத்துவ சேவை தொடங்கப்பட் டது. நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் சுகாதார, நலவாழ்வு மையங்கள் மூலம் பொதுமக் களுக்கு தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங் கப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் இந்தியா வில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் நாடு முழு வதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட் டது. அப்போது அனைத்து தரப்பு மக்களின் நலன்கருதி கடந்த ஏப்ரலில், இ-சஞ்சீவினி தொலை மருத்துவ திட்டத்துக்கு புதிய வடிவம் கொடுக்கப்பட்டது.

மத்திய சுகாதாரத் துறை சார்பில் esanjeevaniopd.in என்ற இணையதளமும் esanjeevaniopd என்ற செயலியும் தொடங்கப்பட் டன. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து இ-சஞ்சீவினி திட்டத்தை செயல்படுத்தின. இதன்மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே இலவசமாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற வழிவகை செய்யப்பட்டது.

பதிவு செய்வது எப்படி?

இத்திட்டத்தில் மருத்துவ ஆலோசனைகளைப் பெற esanjeevaniopd.in இணையத்தில் நுழைந்தவுடன் வலதுபுறம் Patient registration பிரிவை கிளிக் செய்ய வேண்டும். அதில் செல்போன் எண்ணை உள்ளீடு செய்ய வேண் டும். செல்போன் எண்ணுக்கு பாஸ்வேர்டு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்த பாஸ்வேர்டை உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பிறகு நோயாளியாக பதிவு செய்து டோக்கன் பெறுவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்கள் பெயர், பாலினம், மின்னஞ்சல், முகவரி, வயது, மாநிலம், மாவட்டம், நகரம், வீட்டு முகவரி போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.

குறுஞ்செய்தி

டோக்கன் பெறுவதற்கான பக்கத்தை முழுமையாக பூர்த்தி செய்த பிறகு குறுஞ்செய்தியில் வந்த பாஸ்வேர்டை மீண்டும் உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்களுக்கான எண், டோக் கன் எண் ஆகியவை செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்த இரு எண்களையும் பதிவு செய்தால் நீங்கள் காத்திருப்போர் பக்கத் துக்கு நுழைந்து விடுவீர்கள்.

மருத்துவருக்கு அழைப்பு விடுப் பதற்கான நேரம் தொடங்கியவுடன் அழைப்பை உறுதி செய்ய வேண்டும். அப்போது காணொலி வாயிலாக மருத்துவர் உங்களுடன் கலந்துரையாடுவார். மருத்துவ ஆலோசனைகளை பெற்ற பிறகு e-priscription பக்கத்துக்கு சென்று மருந்து சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இலவச மருந்துகள்

இந்த மருந்து சீட்டினை அரு கில் உள்ள அரசு மருத்து வமனைக்கு எடுத்துச் சென்று மருந்துகளை இலவசமாக பெற் றுக் கொள்ளலாம் அல்லது தனியார் மருந்து கடைகளில் பணம் செலுத்தியும் மருந்துகளை வாங்கலாம்.

தமிழகத்தில் இ-சஞ்சீவினி திட்டத்தில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை பொது மருத் துவ ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன. கரோனா நோயாளி களுக்கான மருத்துவ ஆலோ சனை மட்டுமன்றி மகப்பேறு, மனநலம், யோகா, இயற்கை மருத்துவம் குறித்த ஆலோசனை களும் குறிப்பிட்ட நேரத்தில் வழங் கப்படுகின்றன. இதுதொடர்பான முழுமையான விவரங்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள் ளன. தமிழகம் முழுவதும் 865 மருத்துவர்கள் இ-சஞ்சீவினி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர்.

நாடு முழுவதும் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இ-சஞ் சீவனி தொலை மருத்துவ திட்டம் அமலில் உள்ளது.

இதுவரை 6 லட்சத் துக்கும் மேற்பட்டோர் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுள்ளனர். தமிழகம், கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வாரத்தின் 7 நாட்களும் இ-சஞ்சீவினி திட்டம் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படு கின்றன.

முதலிடத்தில் தமிழகம்

இ-சஞ்சீவினி திட்டத்தில் அதிக மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய மாநிலங்களின் பட்டிய லில் தமிழகம் முதலிடத்தில் உள் ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 3,286 பேருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில் 1 லட்சத்து 68,553 பேர், கேரளாவில் 48,081 பேர், இமாச்சல பிரதேசத்தில் 41,607 பேர், ஆந்திராவில் 31,749 பேர், மத்திய பிரதேசத்தில் 21,580 பேர், உத்தராகண்டில் 21,451 பேர், குஜராத்தில் 16,346 பேர், கர்நாடகாவில் 13,703 பேர், மகாராஷ்டிராவில் 8,747 பேர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுள்ளனர். நாளொன்றுக்கு தோரா யமாக 8,500 மருத்துவ ஆலோ சனைகள் வழங்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

20 mins ago

சினிமா

41 mins ago

இந்தியா

44 mins ago

வணிகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்