எல்லா மாவட்டங்கள் மீதும் கவனம் குவிக்க வேண்டும் :

By செய்திப்பிரிவு

சென்னையின் மக்கள்தொகைப் பெருக்கம் எப்பேர்ப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை கரோனா காலத்திலேயே பார்த்துவிட்டோம். முதல் நோய் மையமாக தமிழகத்தில் சென்னையே உருவெடுத்தது. காரணம், அதீத நெருக்கடியான மக்கள்தொகை. அதற்கான காரணம் என்ன என யோசித்துப் பார்த்தால், அங்கே இருக்கும் தொழிற்காரணிகளே முன்வந்து நிற்கின்றன. தமிழகத்தின் எந்த ஊரில் கல்லூரிப் படிப்பை முடித்தாலும் அந்த மாணவர் சென்னையை நோக்கியே வேலை தேடி வர வேண்டியிருக்கிறது. நிலவள ஆதாரங்கள் தேவைப்படும் தொழிற்சாலைகள் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் குவிந்திருப்பதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட சென்னையை மட்டுமே நம்பியிருக்குமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தென்மாவட்டங்களில் கல்வியை நிறைவுசெய்யும் இளைஞர்களுக்கு வசதியாக இந்த மாவட்டங்களைச் சுற்றியே தொழிற்காரணிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தைச் சில மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலமும் வேலைவாய்ப்பில் தன்னிறைவு பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

- உ.ஸ்ரீராம், இதழியல் மாணவர், திருநெல்வேலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்