மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். அனைத்து காரியங்களும் எவ்விதத் தடங்கலும் இன்றி முடியும். ஆன்மிகப் பயணம் செல்வீர்கள்.ரிஷபம்: திருமணப் பேச்சுவார்த்தை நம்பிக்கையைத் தரும்.உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சுபநிகழ்ச்சிகளில் கவுரவிக்கப்படுவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.மிதுனம்: அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபரிடம் சொல்ல வேண்டாம். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடுவதால் பிரச்சினை ஏற்படும்.கடகம்: எதிலும் தெளிவு பிறக்கும். சிலர் பழுதாகியிருந்த பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.சிம்மம்: எத்தனை தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். விஐபிகளால் சில வேலைகள் முடிவடையும். நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள்.கன்னி: எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சமூகத்தில் பிரபலமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விருந்தினர் வருகை உண்டு.துலாம்: நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களை கட்டும். பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும்.விருச்சிகம்: விஐபிகள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். வேற்றுமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். கலைப்பொருட்கள் சேரும்.தனுசு: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.மகரம்: தாழ்வுமனப்பான்மை அடிக்கடி தலைகாட்டும். யாரைநம்புவது என்பதில் குழப்பம் வரும். காசோலைகளை கையொப்ப மிட்டு வைக்க வேண்டாம். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.கும்பம்: வேலைச்சுமை இருக்கும். எந்தக் காரியத்தை தொட்டாலும் இழுபறிக்குப் பின்னரே முடியும். எந்த ஒரு விஷயத்தையும் மற்றவர்களை நம்பாமல் நீங்களே நேரடியாக முடிப்பது நல்லது.மீனம்: வெளியூரில் இருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு திருப்தி தரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

11 mins ago

க்ரைம்

29 mins ago

ஜோதிடம்

27 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

36 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

44 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்