சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் - கிளப்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் : பதிவுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுதுபோக்கு கிளப்களின் உரிமங்களை ரத்து செய்ய பதிவுத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோமலீஸ்வரன் பேட்டையில் இயங்கி வரும் தனியார் பொழுதுபோக்கு கிளப் சார்பில் அதன் செயலாளர் டி.ஆர்.சீனிவாசன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சட்டத்துக்கு உட்பட்டு கடந்த 25ஆண்டுகளாக கிளப் நடத்தி வருகிறோம். எங்களது கிளப் உறுப்பினர்களுக்கு பல்வேறு பொழுதுபோக்கு, விளையாட்டு நிகழ்ச் சிகளை நடத்துகிறோம்.

ஆனால் சோதனை என்ற பெயரில் அடிக்கடி ரெய்டு நடத்திகிளப் நடவடிக்கைகளுக்கு போலீஸார் இடையூறு செய்து வருகின்றனர். எனவே போலீஸார் மற்றும் பதிவுத் துறை அதிகாரிகள் எங்களது கிளப் நடவடிக்கையில் குறுக்கீடு அல்லது தலையீடு செய்ய தடை விதிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘சட்டத்துக்கு உட்பட்டு கிளப் நடத்துவதில் எந்த தவறும் இல்லை. அடிப்படை உரிமைகள் எல்லைமீறப்படும்போதுதான் காவல்துறையும், நீதிமன்றமும் தனதுகடமையை செய்ய வேண்டியுள்ளது. மனுதாரரின் கிளப் மீதுசட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட 4 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

போலீஸாருக்கு அதிகாரம்

சட்டப்படி பதிவுத் துறையில் பதிவு செய்து இயங்கும் கிளப்கள்,சொசைட்டிகள் சட்டத்துக்கு உட்பட்டு முறையாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்கும்அதிகாரம் போலீஸாருக்கு உள்ளது. போலீஸார் ஆய்வு செய்ய வரக்கூடாது என கோர முடியாது. எனவே மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இயங்கும் பொழுதுபோக்கு கிளப்கள் மற்றும் சொசைட்டிகள் சட்டப்படி முறையாக இயங்குகிறதா என்பதையும், அவை முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சோதனை நடத்தி ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பதிவுத் துறைத் தலைவர் உத்தரவிட வேண்டும்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டாலோ அல்லது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ அந்த கிளப்களின் உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்.

கிளப்களின் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரத்தைபோலீஸார் பதிவுத் துறைக்கும், பதிவுகள் தொடர்பான விவரத்தைபதிவுத் துறை, போலீஸாருக்கும் தெரிவிக்க வேண்டும்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு12 வாரங்களில் பதில் அளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டுவிசாரணையை தள்ளிவைத்துள் ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

37 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

5 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்