பிரதமர் மோடியின் 71-வது பிறந்த நாள் - முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், பழனிசாமி, ராமதாஸ் வாழ்த்து :

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்:

தெலங்கானா ஆளுநர் - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திய, வலிமையான, வளமையான பாரதத்தை உருவாக்கிய, மகளிர், குழந்தைகள், இளைஞர்கள் அனைவரும் நலம் வாழ திட்டம் தீட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின்: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: 71-வது பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்குஇனிய வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி: பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மோடியின் அர்ப்பணிப்பும், உறுதியும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து, நாட்டுக்கு சேவையாற்ற வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இன்று 71-வது பிறந்தநாள் காணும்பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் அவர் நூறாண்டு வாழ வேண்டும், நாட்டை வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்