வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி - முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு :

By செய்திப்பிரிவு

ஒலிம்பிக் வாள்வீச்சில் பங்கேற்ற தமிழக வீராங்கனை பவானிதேவி, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தார்.

ஒலிம்பிக் வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்று சென்னை திரும்பியபவானிதேவி, நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஒலிம்பிக்கில் நான் விளையாடியதைப் பார்த்து முதல்வர் பாராட்டினார். இது எனது முதல் ஒலிம்பிக் போட்டி. இப்போட்டியில் தமிழகம் சார்பில் நான் பங்கேற்றது மகிழ்ச்சிஅளிக்கிறது. என்னை மட்டுமின்றி,என் தாயாரையும் முதல்வர் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரை சந்தித்தபோது, நான் வாள் ஒன்றை பரிசாக வழங்கினேன். அப்போது, அடுத்த போட்டியில் விளையாடுவதற்கு இது உறுதுணையாக இருக்கும் என்றுகூறி அதை மீண்டும் எனக்கே அளித்துவிட்டார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். நான் ஏற்கெனவே மின் துறையில் பணியாற்றி வருகிறேன். அதனால் மின்துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளேன். மத்திய அரசிடம் இருந்து பல்வேறு வாய்ப்புகள் வந்த போதிலும், தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாகும். எனது பதவி உயர்வு குறித்தும் கேட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்