வாக்களிக்க தகுதியானவர் பெயர் மட்டும் - வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் : தேர்தல் ஆணையம் உறுதி செய்ய உத்தரவு :

By செய்திப்பிரிவு

வாக்களிக்க தகுதியானவர்களின் பெயர்கள் மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சைலப்பா கல்யாண் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், “வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடியால் ஒரேநபரின் பெயர் பலமுறை இடம்பெற்றுள்ளது. இறந்தவர்கள் மற்றும் இடம் மாறியவர்களின் பெயர்களும் நீக்கப்படவில்லை. எனவே வாக்களிக்க தகுதியானவர்களின் பெயர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வகையில், வாக்காளர் பட்டியலை புதுப்பித்து வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இறப்புச் சான்றிதழ்வழங்கும்போதே அதனுடன் ஆதார் எண்ணை இணைத்தால் இறந்தவர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து எளிதாக நீக்கிவிடலாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை இந்தியதேர்தல் ஆணையம் பரிசீலி்க்க வேண்டும். குறிப்பாக வாக்களிக்க தகுதியானவர்களின் பெயர்கள் மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

58 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்