தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் - பேருந்துகள் சேவை தொடக்கம் : 55 நாட்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கம்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகளின் சேவை 55 நாட்களுக்குப் பிறகுநேற்று தொடங்கியது. முதல் நாளில்70 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தி்ல் கரோனா தொற்றுகுறைந்து வருவதால், பொதுமக்களின் அத்தியாவசிய தேவையைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்து தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 55 நாட்களுக்குப் பிறகு நேற்று காலைமுதல் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதேபோல், தனியார் பேருந்துகளின் சேவையும் தொடங்கின. தமிழக அரசின் வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல் 50 சதவீதஇருக்கைகளில் மட்டும் பயணிகள்பயணித்தனர். இருப்பினும், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவை தொடங்கப்படவில்லை.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேன் மூலம்உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு 3 இருக்கைகள் உள்ள இடத்தில் 2 பேரும், 2 இருக்கைகள் உள்ள இடத்தில் ஒருவரும், கடைசி இருக்கையில் 3 பேரும் அமரும்படி குறியீடு அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

70 சதவீத பேருந்துகள் இயக்கம்

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசு உத்தரவுப்படி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருப்பதால், தேவைக்கு ஏற்றார்போல் பேருந்துகளை இயக்கி வருகிறோம். மொத்த பேருந்துகளில் 70 சதவீத பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. பயணிகளின் வருகை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

சினிமா

21 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

46 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்