பெண்களையும் அர்ச்சகராக்க திட்டம் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

By செய்திப்பிரிவு

பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களையும் அர்ச்சகராக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் சீராய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். ஆணையர் குமரகுருபரன், மண்டல இணை ஆணையர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கோயில்களில் தமிழில் அர்ச்சனை, அறங்காவலர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

இந்து சமய அறநிலையத் துறையின் பணிகளை வேகப்படுத்தி துறையை புதுப்பொலிவுடன் மாற்றஆலோசனை நடத்தினோம். திமுக பதவி ஏற்ற நாளில் இருந்து வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

தமிழில் சில கோயில்களில் அர்ச்சனை செய்யப்படுகிறது. முக்கிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் எனும் பதாகை வைக்கப்படும். அதில் தமிழில் அர்ச்சனை செய்பவர்கள் விவரம் இடம்பெறும். 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

ஜீயர்கள் நியமனம்

பெண்களையும் அர்ச்சகர் ஆக்கும் திட்டம் உள்ளது, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு விரைவில் அர்ச்சகராக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜீயர்கள் நியமனம், இதற்குமுன்பு கடைபிடிக்கப்பட்ட நடைமுறையில் நடைபெறும்.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் 30 யானைகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க மருத்துவர்கள் அடங்கிய இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்